/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணிகிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 13, 2024 03:43 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய பசுமைப்படை சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஆர்.டி.ஓ., பாபு பேரணியை துவக்கி வைத்தார்.
பெங்களூரு சாலை, தர்மராஜா கோவில் சாலை, பழையபேட்டை, காந்திசாலை வழியாக பேரணி சென்று பள்ளியில் நிறைவடைந்தது. இதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம், மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. மரம் வளர்ப்போம், மண் வளம் காப்போம், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என்ற கோஷங்களுடன் மாணவிகள் சென்றனர்.மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள் வினோதினி, ரங்கராஜ், பசுமைத் தோழி நட்டார் கனி, தலைமை ஆசிரியர் மகேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஊத்தங்கரை அறம் விதை அறக்கட்டளை செய்திருந்தனர். காவேரிப்பட்டணம் அரசு மகளிர் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள் கணேசன், நீலமேகம் துவக்கி வைத்தனர். தலைமை ஆசிரியை வளர்மதி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அனிதா உள்பட பலர் பங்கேற்றனர்.