/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ விவசாயிகளுக்கு மா ஏற்றுமதி பயிற்சி விவசாயிகளுக்கு மா ஏற்றுமதி பயிற்சி
விவசாயிகளுக்கு மா ஏற்றுமதி பயிற்சி
விவசாயிகளுக்கு மா ஏற்றுமதி பயிற்சி
விவசாயிகளுக்கு மா ஏற்றுமதி பயிற்சி
ADDED : ஜூன் 01, 2025 01:19 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், மா ஏற்றுமதி குறித்து, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, தோட்டக்கலைத்துறை மற்றும் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஏற்றுமதிக்கு தேவையான மா சாகுபடி செய்ய கடைப்
பிடிக்க வேண்டிய சாகுபடி முறைகள் குறித்து, திருச்சி உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர் அமுதா விளக்கினார்.
கோவை செந்தில், தாவர சுகாதார சான்று பெற மாங்கனிக்கு செய்யும் சிகிச்சை முறை குறித்தும், வெந்நீர் சிகிச்சை, நீராவி சிகிச்சை யு.எஸ்.ஏ., யு.கே., மற்றும் ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேவைப்படும் தர நிர்ணயம் குறித்தும் பேசினார்.
பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் திலகம், நோயியியல் துறை பேராசிரியர் சுந்தரமூர்த்தி மற்றும் தோட்டக்கலைத்துறை பேராசிரியர் ஸ்ரீவித்யா ஆகியோர் மா சாகுபடியில் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து பேசினார். தோட்டக்கலைத்துறையில் மா விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் குணவதி, வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் மோகன் ஆகியோர் விளக்கினர். இதில், 15க்கும் மேற்பட்ட மா ஏற்றுமதி நிறுவனத்தினர் கலந்து கொண்டு, மா ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கமளித்தனர். இப்பயிற்சியில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.