/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போக்குவரத்து விதிகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்போக்குவரத்து விதிகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்
போக்குவரத்து விதிகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்
போக்குவரத்து விதிகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்
போக்குவரத்து விதிகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 06, 2024 07:17 AM
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி உத்தரவின்படி, மாவட்ட போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை இணைந்து, நல்லம்பள்ளி தனியார் கல்லுாரியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.தாளாளர் மணிவண்ணன், டி.எஸ்.பி.,செந்தில்குமார், ஆர்.டி.ஓ., தாமோதரன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் பார்த்திபன், சுபாஸ்ரீ ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
சாலை விபத்து ஏற்பட்ட பிறகு, நீதிமன்றத்தில் எவ்வாறு வழக்கு தொடர்வது. விபத்தால் பாதிக்கப்படும் குடும்பத்தாருக்கு இழப்பீடு பெறும் வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கல்லுாரி திட்ட அலுவலர் முனிவேல் நன்றி கூறினார்.