/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சோமேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழாசோமேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
சோமேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
சோமேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
சோமேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை விழா
ADDED : ஜூலை 11, 2024 12:06 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகரிலுள்ள சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவிலில், 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது.
காலையில் கணபதி பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர பாராயணம், தீபாராதனை ஆகியவை நடந்தன. தொடர்ந்து, கலசாபிஷேகம், காலை, 10:00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, மாலை, 7:00 மணி வரை நடந்தது. ஓசூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வடை, பாயாசத்துடன் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.