ADDED : ஜூன் 07, 2024 12:22 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உச்சனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முரளி, 41, கூலித் தொழிலாளி.
இவருக்கு மஞ்சுளா, 33, என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த, 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் காலை, தேன்கனிக்கோட்டைக்கு சென்ற முரளி, மனைவிக்கு போன் செய்து குழந்தைகளை பார்த்துக் கொள் என்று கூறியுள்ளார். பின் மனைவி போன் செய்தபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. முரளியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மஞ்சுளா கொடுத்த புகார்படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.