/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கரகம்மா தேவி கோவில் கும்பாபிஷேக விழா கரகம்மா தேவி கோவில் கும்பாபிஷேக விழா
கரகம்மா தேவி கோவில் கும்பாபிஷேக விழா
கரகம்மா தேவி கோவில் கும்பாபிஷேக விழா
கரகம்மா தேவி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 12, 2025 01:31 AM
கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த அக்கொண்டப்பள்ளியில் கிராம தேவதை கரகம்மா தேவி கோவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின் இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. விரதமிருந்த பெண்கள் மேள, தாளங்கள் முழங்க தீர்த்தக்குடம் ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
அங்கு, கரகம்மா தேவிக்கு கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.