Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

கிருஷ்ணகிரி சிலவரி செய்திகள்

ADDED : ஜூலை 01, 2024 04:15 AM


Google News
போதையில் பைக் ஓட்டிய

2 வாலிபர்களுக்கு காப்பு

ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., மணி மற்றும் போலீசார், ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் உள்ள காரப்பள்ளி பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது, மதுபோதையில் அவ்வழியாக அதிவேகமாக பைக்குகளை ஓட்டி வந்த, ஒன்னல்வாடியை சேர்ந்த ஆனந்தன், 26, மற்றும் காரப்பள்ளி பிள்ளையார் நகரை சேர்ந்த சதீஷ், 26, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்து, ஜாமினில்

விடுவித்தனர்.

காப்பாட்சியருக்குபாராட்டு விழா

கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியராக, 2011 முதல் பணியாற்றி வந்தவர் கோவிந்தராஜ், 60. திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த இவர், வரலாற்று ஆய்வுக்குழுவுடன் சேர்ந்து, 150 கல்வெட்டுகள், 20க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள், பல தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பெருங்கற்படைக்கால நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை கண்டறிந்துள்ளார். 28 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு நேற்று பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

வரலாற்றுக்குழு பிரியதர்ஷினி வரவேற்றார். காப்பாட்சியர்கள் பக்கிரிசாமி, சரவணன், மருது பாண்டியன், சிவக்குமார், பால்துரை, ஜென்சி, சிவக்குமார், தொல்லியல் அலுவலர் பரந்தாமன் ஆகியோர், கோவிந்தராஜிக்கு சால்வை, சந்தன மாலை, கிரீடம் அணிவித்து, நினைவு பரிசு வழங்கினர். வரலாற்றுக் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

இருவேறு சாலை விபத்தில்

2 முதியவர்கள் உயிரிழப்புகிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி தாலுகா பாலேதோட்டம் அருகிலுள்ள நயினார் கொட்டாயை சேர்ந்தவர் சண்முகம், 64; இவர் கடந்த, 26 இரவு மொபட்டில் அங்கம்பட்டி - சோனாரஹள்ளி சாலையில், பூசாரிக்கொட்டாய் வளைவு அருகே சென்றபோது, மொபட் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த சண்முகத்தை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், நேற்று முன்தினம் சண்முகம் உயிரிழந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

* காவேரிப்பட்டணம் அருகே உள்ள எம்.சவுளூரை சேர்ந்தவர் முருகேசன், 65; இவர் கடந்த, 29 இரவு மொபட்டில், தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் பையூர் அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத கார், மொபட் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த முருகேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us