/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 22, 2025 01:28 AM
அரூர், -தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் ஸ்ரீராம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி தேஜாஸ்ரீ, 500-க்கு, 497 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில், 3ம் இடமும், பள்ளியில் முதலிடமும் பெற்றுள்ளார்.
மாணவர் தினேஷ், 496 மதிப்பெண் பெற்று பள்ளியில், 2ம் இடமும், மாணவர் தீபன், திலீப்குமார் ஆகியோர், 495 மதிப்பெண் பெற்று, 3-ம் இடமும் பெற்றுள்ளனர். மேலும், 490 மதிப்பெண்களுக்கு மேல், 8 பேர், 480 மதிப்பெண்களுக்கு மேல், 32 பேரும் பெற்றுள்ளனர். அறிவியலில், 26 பேர், சமூக அறிவியலில், 19 பேர், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், தமிழில்,- 5 பேர், ஆங்கிலத்தில், 8 பேர், கணிதத்தில், 7 பேர், 100-க்கு, 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை, ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர் ஜான் இருதயராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.