Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்

காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்

காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்

காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம்

ADDED : ஜன 01, 2024 11:20 AM


Google News
ஓசூர்: ஓசூர், பாரதிதாசன் நகரிலுள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், 25ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா மற்றும் 17ம் ஆண்டு காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது.

அதிகாலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, காலை, 6:45 மணிக்கு, பாலவிநாயகர், பாலமுருகன், நவக்கிரகங்கள், நாகர் மற்றும் கல்யாண காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, மணிகண்ட சிவாச்சாரியார் குழு மூலம் லட்சார்ச்சனை நடந்தது.காலை, 11:30 மணிக்கு, பூஜை பொருட்களான மஞ்சள், எலுமிச்சை, தேங்காய், உப்பு ஆகியவை ஏலம் விடப்பட்டன. நேற்று காலை, 8:30 மணிக்கு, கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து, சீர்வரிசை தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர். 10:00 மணிக்கு மேல், திருமாங்கல்ய பூஜை மற்றும் காமாட்சி - ஏகாம்பரேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us