/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் போராட்டம்தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் போராட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் போராட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் போராட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் போராட்டம்
ADDED : ஜன 28, 2024 10:20 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாரப்பன் தலைமை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் தியோடர்ராபின்சன் துவக்கி வைத்து பேசினார்.
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணையை உடனே வெளியிட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அனைத்து சங்க மாவட்ட நிர்வாகிகள் அருண்பிரகாஷ், லோகேஷ், அருணாசலம் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டு இயக்கத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.