ADDED : ஜூன் 06, 2025 01:13 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த ஒப்பதவாடியை சேர்ந்தவர் பெரியண்ணன், 65, விவசாயி. இவர் கடந்த, 2ல் தன் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை மேய்க்க வீட்டை பூட்டி விட்டு, அருகிலுள்ள நிலத்திற்கு சென்றார்.
கால்நடைகளை மேய்த்து விட்டு திரும்பிய பெரியண்ணன், தன் வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிலிருந்த அரை சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. புகார் படி பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.