/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாகிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
ADDED : பிப் 25, 2024 04:12 AM
கிருஷ்ணகிரி-மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 76-வது பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், கிட்டம்பட்டியில், மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமையில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி மற்றும் நகர செயலாளர் விமல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட, அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர். அதேபோல வேப்பனஹள்ளி, பர்கூர், மத்துார், ஊத்தங்கரை பகுதிகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரியில், பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கோவிந்தராஜ் தலைமையில், ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
* ஊத்தங்கரை ரவுண்டானாவில், ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமையில் கட்சியினர், ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.