/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கி.கிரி மாவட்டத்தில் ஊரக பகுதிக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்கி.கிரி மாவட்டத்தில் ஊரக பகுதிக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்
கி.கிரி மாவட்டத்தில் ஊரக பகுதிக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்
கி.கிரி மாவட்டத்தில் ஊரக பகுதிக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்
கி.கிரி மாவட்டத்தில் ஊரக பகுதிக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்டம் துவக்கம்
ADDED : ஜூலை 12, 2024 12:56 AM
கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி மாவட்டம், பாளையம்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த, கொண்டப்பனநாயனபள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் கிருஷ்ணகிரி ஓன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி, மங்கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஊரகப் பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்த்து பேசியதாவது:மாவட்டத்தில், 2வது கட்டமாக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி, பர்கூர், தளி, ஊத்தங்கரை, சூளகிரி, காவேரிப்பட்டணம், கெலமங்கலம், ஓசூர், வேப்பனஹள்ளி, மத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வரும், 30 வரை 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், 96 முகாம்கள் நடத்தி, காலை 10:00 முதல், மாலை, 3:00 மணி வரை கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளன. முகாமிற்கு வரும் பொதுமக்கள் யாரும் மனுக்களை எழுதி வர தேவையில்லை. உதவி மையத்தில் நீங்கள் எந்த துறைக்கு மனு அளிக்க வந்துள்ளீர்கள் என்பதை விசாரித்து, அந்தத்துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இணையதள பதிவேற்றத்தில் விண்ணப்பித்து, உங்கள் மனுவின் விண்ணப்ப நகலினை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, வேளாண் துறை இணை இயக்குனர் பச்சையப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.