/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கணவன் வெட்டி படுகொலை; மனைவி உட்பட 4 பேர் கைது கணவன் வெட்டி படுகொலை; மனைவி உட்பட 4 பேர் கைது
கணவன் வெட்டி படுகொலை; மனைவி உட்பட 4 பேர் கைது
கணவன் வெட்டி படுகொலை; மனைவி உட்பட 4 பேர் கைது
கணவன் வெட்டி படுகொலை; மனைவி உட்பட 4 பேர் கைது
ADDED : மார் 21, 2025 11:44 PM
சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சென்னப்பள்ளி அருகே பெரியபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 45; கூலித்தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மாள், 37. தம்பதிக்கு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
ரமேஷ் அடிக்கடி குடித்துவிட்டு, வள்ளியம்மாளுடன் தகராறு செய்து வந்தார். அதனால், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, மூன்று குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வள்ளியம்மாள் சென்று விட்டார்.
நேற்று காலை கிராமத்தில் இருந்து தன் தம்பி சிவராஜ், 33, என்பவருடன் பைக்கில் சூளகிரி நோக்கி வள்ளியம்மாள் சென்றார். அங்கு வந்த ரமேஷ், மனைவியை தன்னுடன் அனுப்பி வையுங்கள் எனக் கேட்டு தகராறு செய்தார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், சிவராஜின் இடது முழங்கால் பகுதியில் வெட்டினார்.
இதைப் பார்த்த அவரது சகோதரர்கள் கோவிந்தசாமி, 35, விக்னேஷ், 36, ஆகியோர் கத்தியால், ரமேஷின் முகம், தலை பகுதியில் வெட்டினர். ரமேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டு, வள்ளியம்மாள், கோவிந்தசாமி, விக்னேஷ், சிவராஜ் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.