/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கும்பாபிஷேகத்தையொட்டி புனித நீர் கலச ஊர்வலம் கும்பாபிஷேகத்தையொட்டி புனித நீர் கலச ஊர்வலம்
கும்பாபிஷேகத்தையொட்டி புனித நீர் கலச ஊர்வலம்
கும்பாபிஷேகத்தையொட்டி புனித நீர் கலச ஊர்வலம்
கும்பாபிஷேகத்தையொட்டி புனித நீர் கலச ஊர்வலம்
ADDED : அக் 24, 2025 12:54 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த நரிமேடு பால கணபதி, பால சுப்ரமணிஸ்வரர், பந்தல ராஜ ஐயப்பன் சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
இதையொட்டி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து மேள தாளங்களுடன் புனித நீரை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். இதில் பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, முதல்கால யாக வேள்வி, வேதிகா அர்ச்சனை, கலச ஆராதனை, மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை ஆகியவை நடந்தது. இன்று காலை, விக்னேஷ்வர பூஜை, நாடி சந்தானம், மஹா கும்பாபிஷேகம் ஆகியவை
நடக்கிறது.


