Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரி, தர்மபுரியில் சாரல் மழை; குளுகுளு சீசனை அனுபவிக்கும் மக்கள்

கிருஷ்ணகிரி, தர்மபுரியில் சாரல் மழை; குளுகுளு சீசனை அனுபவிக்கும் மக்கள்

கிருஷ்ணகிரி, தர்மபுரியில் சாரல் மழை; குளுகுளு சீசனை அனுபவிக்கும் மக்கள்

கிருஷ்ணகிரி, தர்மபுரியில் சாரல் மழை; குளுகுளு சீசனை அனுபவிக்கும் மக்கள்

ADDED : மே 31, 2025 06:51 AM


Google News
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவியது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை சீசனுக்கு முன்பே பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பி வருவதுடன், வெப்பமும் தணிந்துள்ளது. இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரியில் காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்திருந்தது. அவ்வப்போது பெய்த சாரல் மழையால் குளுகுளு சீதோஷ்ணநிலை நிலவியது. இதையடுத்து கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி படகு இல்லத்தில், குடும்பத்தினருடன் வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

இன்னும் சில தினங்களில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கவுள்ள நிலையில், நேற்று மாலை, குழந்தைகளுடன் கடைவீதிகளில் குவிந்த மக்கள், பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கினர். தர்மபுரியிலும் நேற்று காலை முதலே வெயில் இல்லாமல், கருமேகங்களுடன் குளிர்ந்த சீதோஷ்ணநிலை நிலவியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனுபவித்து மகிழ்ந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us