ADDED : அக் 04, 2025 01:14 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், 3 மி.மீ., அளவிற்கு மழை பதிவானது. நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், 5:30 மணிக்கு மேல், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
ஓசூரில் ராயக்கோட்டை சாலை சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட் உட்பட நகரில் பல இடங்களில் சாலையில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சில இடங்களில் கனமழையால் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.


