/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம் சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : ஜூன் 28, 2025 03:48 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள தமிழ்-நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், சுமை துாக்கு-வோரின் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
சின்னமுனியன், சக்தி தலைமையில், 28 தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். வருகை பதிவேட்டில் பெயர் இல்-லாமல் வேலை செய்து வரும் தொழிலாளர்களின் பெயரை, வருகை பதிவேட்டில் சேர்க்க வேண்டும். மாநில அளவில் சங்க அங்கீகார தேர்தலை, காலதாமதமின்றி நடத்த வேண்டும். 5 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, இளம்சிவப்பு அட்டையும், 10 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பச்சை அட்டையும் உடனடியாக வழங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்ப-டுத்த வேண்டும். தொழிலாளர்களின் ஆதார் இணைப்பில் ஏற்பட்-டுள்ள குளறுபடிகளை சரி செய்து, வேண்டிய பண பலன்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தினக்கூ-லியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கை-களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
* போச்சம்பள்ளி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், மாவட்ட சுமை துாக்குவோர் நலச்சங்க துணைத் தலைவர் மற்றும் போச்சம்பள்ளி நலச்சங்க தலைவர் பழனி தலைமையில், 20க்கும் மேற்பட்ட சுமை துாக்குவோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.