/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் கோவில்களில் குருப்பெயர்ச்சி பூஜை ஓசூர் கோவில்களில் குருப்பெயர்ச்சி பூஜை
ஓசூர் கோவில்களில் குருப்பெயர்ச்சி பூஜை
ஓசூர் கோவில்களில் குருப்பெயர்ச்சி பூஜை
ஓசூர் கோவில்களில் குருப்பெயர்ச்சி பூஜை
ADDED : மே 12, 2025 02:28 AM
ஓசூர்: குருபகவான் நேற்று காலை, 10:58 மணிக்கு, ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார்.
இதையொட்டி, ஓசூர் முல்லை நகர் காயத்திரி அம்பாள் கோவிலில், 12ம் ஆண்டு குருப்பெயர்ச்சி பூஜை நேற்று நடந்தது. காலை, 9:30 மணிக்கு சிறப்பு ஹோமம், அபிேஷகம், அர்ச்சனை நடந்தது. மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ராசிக்-காரர்கள் பரிகார பூஜைகள் செய்து சுவாமியை தரிசனம் செய்தனர்.அதேபோல், பெரியார் நகரில் உள்ள வேல்முருகன் கோவிலில், குருப்பெயர்ச்சி பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் தனி சன்ன-தியில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பரிகார ஹோமம், பூர்ணாஹூதி,
கலசாபிேஷகம் உள்ளிட்டவை நடந்தன. குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, முருகன் சிறப்பு அலங்காரத்தில்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.