/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பழங்குடியினருக்கு அரசின் சமூக நல திட்டங்கள் வழிகாட்டுதல் பயிற்சிபழங்குடியினருக்கு அரசின் சமூக நல திட்டங்கள் வழிகாட்டுதல் பயிற்சி
பழங்குடியினருக்கு அரசின் சமூக நல திட்டங்கள் வழிகாட்டுதல் பயிற்சி
பழங்குடியினருக்கு அரசின் சமூக நல திட்டங்கள் வழிகாட்டுதல் பயிற்சி
பழங்குடியினருக்கு அரசின் சமூக நல திட்டங்கள் வழிகாட்டுதல் பயிற்சி
ADDED : ஜூலை 12, 2024 12:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 25 கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, வன உரிமை சட்டம் சார்ந்த விழிப்புணர்வை, சிவா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, மாவட்டத்திலுள்ள பழங்குடியின மக்களுக்கான அரசின் சமூக நலத்திட்டங்கள் குறித்து, கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகத்தில், ஒரு நாள் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், சுகாதாரத் துறை பயிற்றுனர் ராம்சுரேஷ், நேரு யுவகேந்திரா அமைப்பாளர் அப்துல்காதர், வனச்சரக அலுவலர் முரளி, மின் துறை உதவி செயற்பொறியாளர் ராஜா, தாட்கோ மேலாளர் வேல்முருகன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, சமூக நலத்துறை, ஆதி திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம், வேளாண் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, சிவா அறக்கட்டளை திட்ட இயக்குனர் சுப்ரமணி சிவா மற்றும் களப்பணியாளர்கள் சாதிக், விஜயகுமார், பர்கத்துல்லா, அம்சகிரி ஆகியோர் செய்திருந்தனர்.