/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 3 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை 3 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
3 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
3 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
3 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
ADDED : செப் 21, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், 3 மாவட்ட மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள், பல்வேறு குடியிருப்பு பகுதிகள், பர்கூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்தது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 3,237 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 2,868 கன அடியாக சரிந்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில் நீர்மட்டம், 49.50 அடியாக உள்ளது.
அணையிலிருந்து வினாடிக்கு, 2,984 கன அடி தண்ணீர், 3 மணல் போக்கி சிறிய மதகுகள் வழியாக திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் சீறி பாய்ந்து செல்லும் தண்ணீர், தரைப்பாலத்தை மூழ்கடித்த படி செல்கிறது. இதனால், தரைப்பாலம் வழியாக, அணை பூங்காவிற்கு செல்லவும், அணையை பார்வையிடவும் சுற்றுலா பயணிகளுக்கு, 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட, 3 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றில்
குளிக்கவோ, கடக்கவோ கூடாது என, நீர்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர்.