/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல்லுாரி மாணவியர், குழந்தை உள்பட ஐந்து பேர் மாயம் கல்லுாரி மாணவியர், குழந்தை உள்பட ஐந்து பேர் மாயம்
கல்லுாரி மாணவியர், குழந்தை உள்பட ஐந்து பேர் மாயம்
கல்லுாரி மாணவியர், குழந்தை உள்பட ஐந்து பேர் மாயம்
கல்லுாரி மாணவியர், குழந்தை உள்பட ஐந்து பேர் மாயம்
ADDED : ஜூன் 15, 2025 01:38 AM
கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த வி.கோட்டாவை சேர்ந்தவர் காவியா. 20, பி.ஏ., மூன்றாமாண்டு கல்லுாரி மாணவி. இவரது அக்கா நந்தினி திருமணமாகி, குருபரப்பள்ளி அடுத்த நரணிக்குப்பத்தில் வசித்து வருகிறார். கடந்த, 12ல், நந்தினி வீட்டிற்கு காவியா
வந்துள்ளார். பின்னர் வெளியே செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
இதுகுறித்து காவியாவின் பெற்றோர் குருபரப்பள்ளி போலீசில் அளித்த புகார்படி, ஆந்திர மாநிலம், குப்பம் அடுத்த வி.கோட்டாவை சேர்ந்த பாஸ்கர், 25, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக
தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் தேடி வருகின்றனர்.
* வேப்பனஹள்ளி அடுத்த குருவரெட்டிபுதுாரை சேர்ந்தவர் அமராவதி, 32. இவர் கடந்த, 12ல், தன், 7 வயது மகன் கார்த்திக் ராஜா, 4 வயது மகள் கீர்த்தி ஆகியோருடன் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் முனிராஜ் வேப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதில், தனக்கு அதிக கடன் இருந்ததால் கோபித்துக் கொண்டு அமராவதி, குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஊத்தங்கரை அருகே, 17 வயது சிறுமி பி.இ., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 12ல், வீட்டில் இருந்து வெயில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் அளித்த புகாரில், பாம்பாறு டேம் பகுதியை சேர்ந்த விஜயகுமார், 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் தேடி வருகின்றனர்.