/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு அபராதத்துடன் சிறை குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு அபராதத்துடன் சிறை
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு அபராதத்துடன் சிறை
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு அபராதத்துடன் சிறை
குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு அபராதத்துடன் சிறை
ADDED : ஜூன் 13, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி, ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராத தொகையுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசினார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து கொடியசைத்து, பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வீட்டு வேலை, சாலையோர தாபா கடைகள், உணவு விடுதிகள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட எங்கும் வேலைக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டால், உரிமையாளர்களுக்கு, 20,000 ரூபாய் அபராதத்துடன், ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், வேளாண் துறை இணை இயக்குனர் பச்சையப்பன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் மாதேஸ்வரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி நேற்று ஏற்கப்பட்டது. ஊத்தங்கரை எஸ்.ஐ., ஜெய்கணேஷ், 'குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் தடுக்க வேண்டும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன்' என உறுதிமொழி வாசிக்க, போலீசார் உறுதிமொழி ஏற்றனர்.