'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம்
ADDED : ஜூலை 10, 2024 06:50 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நடக்க இருப்பதாக மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை, மாவட்டத்திலுள்ள ஏதாவது ஒரு தாலுகாவில், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட துறை அலுவலர்கள் அங்கேயே தங்கி, கள ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் திட்டங்கள், சேவைகள் மக்களுக்கு தங்கு, தடையின்றி சென்றடைவதை உறுதி செய்ய, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இம்மாதம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் வரும், 18 காலை, 9:00 முதல், 19 காலை, 9:00 மணி வரை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நடக்கிறது. இத்திட்டம் தொடர்பாக, பொதுமக்கள் அந்தந்த ஆர்.ஐ., அலுவலகங்களில் இன்று (ஜூலை, 10) காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை முன்கூட்டியே மனுக்களை வழங்கலாம். குறிப்பாக, பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.