/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மகளுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரின் கையை வெட்டி துண்டாக்கிய தந்தை கைது மகளுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரின் கையை வெட்டி துண்டாக்கிய தந்தை கைது
மகளுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரின் கையை வெட்டி துண்டாக்கிய தந்தை கைது
மகளுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரின் கையை வெட்டி துண்டாக்கிய தந்தை கைது
மகளுக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரின் கையை வெட்டி துண்டாக்கிய தந்தை கைது
ADDED : செப் 11, 2025 02:02 AM
அரக்கோணம், ;ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த ஷாநகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோபி, 30, திருமணமானவர். இவர் அதே பகுதியில், 25, வயது பெண் ஒருவரின் வீட்டின் அருகே சென்று அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். அதேபோன்று நேற்று முன்தினம் இரவு, அப்பெண்ணின் வீட்டருகே சென்று தொந்தரவு செய்துள்ளார்.
இதை பெண்ணின் தந்தை வடிவேல், 55, தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வடிவேல், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கோபியை வெட்டியதில், அவரது வலது கை துண்டானது. அவரை திருள்ளூர் அரசு மருத்துவ
மனையில் சேர்த்தனர். அரக்கோணம் டவுன் போலீசார், வடிவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.