ADDED : ஜன 06, 2024 07:17 AM
அரூர்: அரூரில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார். ராஜகுமாரன், உதயகுமார், வேலாயுதம் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், தென்பெண்ணையாறு நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து வேடகட்டமடுவு பஞ்.,க்கு உட்பட்ட, 2,200 ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின், 2018ல் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாட்டு கொட்டகை வேண்டி, 21, பசுமை வீடு வேண்டி, 3, என, 24 மனுக்கள் அளிக்கப்பட்டது.அவை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டிய நிலையில், அரூரில் ஒரு போண்டா கடையில் இருந்ததாக புகார் கூறிய விவசாயிகள், ஆர்.டி.ஓ.,விடம் காட்டினர். பதிலளித்த ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர், விவசாயிகளின் புகார், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.