ADDED : ஜூன் 28, 2024 01:40 AM
கிருஷ்ணகிரி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று, கிருஷ்ணகிரி அடுத்த சந்தம்பட்டியில் நடந்தது. மா நர்சரி உரிமையாளர் சங்க தலைவர் கன்னையா தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலை வர் வரதராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முனிரத்தினம் வரவேற்றார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் பேசினார்.
கூட்டத்தில், வரும் ஜூலை, 5ல், கிருஷ்ணகிரியில் நடக்கும் பேரணியில், 1,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வது. தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒடிசா அரசு வழங்கியது போல், நெல் ஒரு கிலோவிற்கு, 31 ரூபாய் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு, 6,000 ரூபாய் வழங்க வேண்டும். ஒரு டன் மாங்காய்க்கு, 50,000 ரூபாய்க்கு குறையாமல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்வதால், அவற்றை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.