/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : ஜூன் 16, 2025 03:27 AM
ஓசூர்: ஓசூர், சிப்காட் அரிமா சங்கம், தேசிய மனித வள மேம்பாட்டு இயக்கம், இந்திய மருத்துவ சங்க ஓசூர் கிளை, குணம் மருத்துவ-மனை ஆகியவை சார்பில், சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓசூர் ரன் என்ற பெயரில், 5 மற்றும் 10 கி.மீ., துார மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. விழாவை-யொட்டி, ஓசூர் நகரில், 1,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. ஓசூர் குணம் மருத்துவமனை நிர்வாக இயக்கு-னர்கள் டாக்டர்கள் பிரதீப்குமார், செந்தில் ஆகியோர் கொடிய-சைத்து போட்டிகளை துவக்கி வைத்தனர்.
ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டலில் இருந்து, முக்கிய சாலைகள் வழியாக சென்று, மீண்டும் ஓட்டலில் மாரத்தான் நிறைவு பெற்றது. வயது அடிப்படையில் பல குழுக்களான மொத்தம், 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு மொத்தம், 1.50 லட்சம் ரொக்கம், சான்றிதழ்களை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, தொழிற்-சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன், முன்னாள் மாவட்ட கவர்னர் ரவிவர்மா ஆகியேர் வழங்கினர். 50 வயதிற்கு மேற்பட்டோர் பெண்கள் பிரிவில், கர்நாடகா மாநிலம், குடகில் இருந்து வந்திருந்த, 70 வயது மூதாட்டி முதலிடமும், உடுப்-பியை சேர்ந்த, 73 வயது மூதாட்டி, 2ம் இடமும் பெற்று
அசத்தினர்.