Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இ.கம்யூ.,-- எம்.எல்.ஏ., சொந்த ஊரில் குடிநீர் கேட்டு மறியல்

இ.கம்யூ.,-- எம்.எல்.ஏ., சொந்த ஊரில் குடிநீர் கேட்டு மறியல்

இ.கம்யூ.,-- எம்.எல்.ஏ., சொந்த ஊரில் குடிநீர் கேட்டு மறியல்

இ.கம்யூ.,-- எம்.எல்.ஏ., சொந்த ஊரில் குடிநீர் கேட்டு மறியல்

ADDED : மே 13, 2025 02:25 AM


Google News
கெலமங்கலம் :கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், நாகமங்கலம் பஞ்.,த்தில், வரகானப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது. வேப்பனஹள்ளி தொகுதிக்குள் வரும் இக்கிராமம் தான், தளி தொகுதி இ.கம்யூ.,-- எம்.எல்.ஏ., ராமச்சந்திரனின் சொந்த ஊராகும். இக்கிராமம் வழியாக செல்லும் கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதமாக நடந்து வருகிறது.

அதனால், சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த ஒகேனக்கல் மற்றும் போர்வெல் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக வரகானப்பள்ளி கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், கெலமங்கலம் ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி, டிராக்டர் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய

நடவடிக்கை எடுத்தார். ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என, 50 க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, கெலமங்கலம் பி.டி.ஓ., சதீஷ்பாபு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, சேதமான குழாய்களை சீரமைத்து, அப்பகுதியில் உள்ள, 60,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை நிரப்பி வினியோகம் செய்வதாக உறுதியளித்தனர். அதனால் போராட்டம் முடிவுக்கு வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us