ADDED : மே 14, 2025 01:53 AM
கிருஷ்ணகிரி, பர்கூர் தாலுகா ஒப்பதவாடி பஞ்., சின்ன கோட்டூரில், வீரபத்திரன் தலைமையில், 40 பேரும், சிகரலப்பள்ளி பஞ்சாயத்தில் ராஜேந்திரன் தலைமையில், 30 பேரும் என மொத்தம், 70 பேர், இ.கம்யூ., கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சி மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு பேசினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் மோகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஒகேனக்கல் குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டன.