/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நாகரசம்பட்டியில் துார்வாரும் பணிகள்;கடைமடை ஏரியில் துவங்க கோரிக்கை நாகரசம்பட்டியில் துார்வாரும் பணிகள்;கடைமடை ஏரியில் துவங்க கோரிக்கை
நாகரசம்பட்டியில் துார்வாரும் பணிகள்;கடைமடை ஏரியில் துவங்க கோரிக்கை
நாகரசம்பட்டியில் துார்வாரும் பணிகள்;கடைமடை ஏரியில் துவங்க கோரிக்கை
நாகரசம்பட்டியில் துார்வாரும் பணிகள்;கடைமடை ஏரியில் துவங்க கோரிக்கை
ADDED : செப் 22, 2025 01:40 AM
கிருஷ்ணகிரி;பாலேகுளி முதல் சந்துார் ஏரி வரை செல்லும் கால்வாயில், நாகரசம்பட்டி பகுதியில் துார்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கடைமடை ஏரியில் துவங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து கால்வாய் மூலம், பாலேகுளி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியில் இருந்து சந்துார் ஏரி வரை உள்ள, 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கடந்த, 2012-ம் ஆண்டு கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் மொத்த துாரம், 13.8 கி.மீ., இக்கால்வாய் திட்டம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 5,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன் பெறுகிறது. மேலும், 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில், பாலேகுளி ஏரியில் இருந்து சந்துார் வரை உள்ள ஏரிகளுக்கு ஆண்டிற்கு ஒரு கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது கால்வாயின் பல இடங்களில் மழையால் மண் சரிந்தும், அதிகளவில் புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் நீர்கடத்தும் திறன் பாதிக்கப்படுவதாக, கிருஷ்ணகிரி அணை இடதுபுறக்கால்வாய் நீடிப்பு உபரிநீர் இடது கால்வாய் (பாலேகுளி முதல் சந்துார் வரை) பயன்பெறுவோர் சங்கத்தினர், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதை தொடர்ந்து கால்வாய் துார்வார கலெக்டரும் உத்தரவிட்டார்.நாகரசம்பட்டி அருகே என்.தட்டக்கல் காட்டுக்கொல்லை ஏரி அருகே கால்வாய் துார்வாரும் பணியை நேற்று முன்தினம், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா தொடங்கி வைத்து, பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொண்டார். நிகழ்வில், ஆர்.ஐ., கலைச்செல்வி, வி.ஏ.ஓ.,மாதேஷ், கிராம உதவியாளர் யுவராஜ், விவசாய சங்க தலைவர் சிவகுரு, டவுன் பஞ்., துணைத் தலைவர் குமார், இளங்கோ, குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'போச்சம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட காட்டுக்கொல்லை ஏரி முதல் சந்துார் ஏரி வரை கால்வாய் துார்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாலேகுளி ஏரியில் இருந்து கால்வாய் துார்வாரும் பணியை, கிருஷ்ணகிரி தாசில்தார் தொடங்கி வைப்பார்கள் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இக்கால்வாய் துார்வாரும் பணியை, கடைமடை ஏரியான சந்துார் ஏரியில் இருந்து தொடங்க வேண்டும். அங்கு கால்வாயில் அதிகளவில் மண் சரிந்து காணப்படுகிறது' என்றனர்.