/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : பிப் 12, 2024 10:56 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அலுவலகங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என, அரசு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் சரயு அறிவுரை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து, அரசு அலுவலகங்களில் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசியதாவது:
தமிழக மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, 'மிஷன் லைப்' திட்டத்தில், அரசு அலுவலக நடைமுறைகளில் பிளாஸ்டிக் குறைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, அரசு அலுவலகங்களில் ஒருமுறை பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் மீண்டும், மீண்டும் பயன்படுத்த கூடிய கண்ணாடி மற்றும் எவர்சில்வர் பொருட்களை உபயோகப்படுத்துதல், வெள்ளைத்தாள்களை இருபுறமும் பயன்படுத்துதல், மின் பயன்பாட்டை குறைக்க, எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, மறுசுழற்சி செய்யும் நடைமுறை, அனைத்து அலுவலகங்களிலும் கொண்டு வரப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அலுவலகங்கள், சுற்றுச்
சூழலுக்கு உகந்ததாக மாற்றிடவும், பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக திகழவும், அதிகாரிகள் உதவி புரிய வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, ஓசூர் மாநகராட்சி
கமிஷனர் சினேகா, வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., பாபு, பசுமை தோழி நட்டார்கனி
உட்பட பலர் பங்கேற்றனர்.