Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குழந்தை திருமணத்தால் மனமுடைந்த மாணவி தற்கொலை; கணவர் கைது

குழந்தை திருமணத்தால் மனமுடைந்த மாணவி தற்கொலை; கணவர் கைது

குழந்தை திருமணத்தால் மனமுடைந்த மாணவி தற்கொலை; கணவர் கைது

குழந்தை திருமணத்தால் மனமுடைந்த மாணவி தற்கொலை; கணவர் கைது

ADDED : ஜூலை 10, 2024 06:50 AM


Google News
ஓசூர்: கெலமங்கலம் அருகே, திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே தட்டச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித், 26, தனியார் நிறுவன ஊழியர்; இவருக்கும் பிளஸ் 2 படித்து வந்த, 17, வயது மாணவிக்கும் கடந்த பிப்., 21ல் இருவீட்டார் சம்மதத்துடன் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது. தன் படிப்பு பாதிக்கப்பட்டதால் மாணவி, மனமுடைந்து காணப்பட்டார். தம்பதிக்குள் கருத்து வேறுபாடால் குடும்ப பிரச்னை இருந்தது. கடந்த, 7 மாலை, 6:00 மணிக்கு, மாணவி தென்னை மரத்திற்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு மாணவி இறந்தார். ரத்தினகிரி வி.ஏ.ஓ., லோகநாதன் கெலமங்கலம் போலீசில் நேற்று அளித்த புகாரில், சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, குழந்தை திருமணம் செய்த அஜித்தை போலீசார் நேற்று கைது செய்தனர். திருமணமான, 7 ஆண்டுகளுக்குள் மாணவி தற்கொலை செய்ததால், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., வழக்குப்பதிவு செய்தார். ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us