/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
ADDED : ஜூன் 22, 2024 12:33 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரின் கவன ஈர்ப்பு மாலை நேர தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார்.
இணை செயலர்கள் சாந்தி, சுமதி முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலர் ஜெகதாம்பிகா, முன்னாள் மாநில தணிக்கையாளர் நடராஜன், மாநில துணைத் தலைவர் மஞ்சுளா ஆகியோர் பேசினர்.போராட்டத்தில், முதல்வர் சொன்ன தேர்தல் வாக்குறுதிப்படி, காலமுறை ஊதியம் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், 12 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.