ஓசூர்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பாதிப்புகளை கண்டித்தும், போதை பொருளை தடை செய்யக்கோரியும், தேன்கனிக்கோட்டையில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முரளி தலைமை வகித்தார். முருகேசன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் இளவரசன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.