ADDED : ஜன 06, 2024 07:17 AM
தர்மபுரி: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வி.ஏ.ஓ., அலுவலர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
இதில், டிஜிட்டல் கிராப் சர்வே பணியை துவங்க கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தத்தை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பு செயலாளர் முனுசாமி, முன்னாள் வட்டார பிரசார செயலாளர் நிசார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.இதேபோல், தர்மபுரி, காரிமங்கலம், பாலக்கோடு உள்ளிட்ட தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.