/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வேப்பனஹள்ளியில் டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை போலி ஆதார் எண் மூலம் 'சிம்' கார்டு வழங்கியவர் சிக்கினார் வேப்பனஹள்ளியில் டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை போலி ஆதார் எண் மூலம் 'சிம்' கார்டு வழங்கியவர் சிக்கினார்
வேப்பனஹள்ளியில் டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை போலி ஆதார் எண் மூலம் 'சிம்' கார்டு வழங்கியவர் சிக்கினார்
வேப்பனஹள்ளியில் டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை போலி ஆதார் எண் மூலம் 'சிம்' கார்டு வழங்கியவர் சிக்கினார்
வேப்பனஹள்ளியில் டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை போலி ஆதார் எண் மூலம் 'சிம்' கார்டு வழங்கியவர் சிக்கினார்
ADDED : மே 11, 2025 03:10 AM
கிருஷ்ணகிரி, போலி ஆதார் எண் மூலம் சிம்கார்டு வழங்கிய, வேப்பனஹள்ளி மொபைல் கடைக்காரரை, டில்லி சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி, அடுத்த சிகரமானப்பள்ளியை சேர்ந்தவர் சதாசிவம்,25; பி.இ., பட்டதாரி. இவர், வேப்பன
ஹள்ளியில், கொங்கனப்பள்ளி சாலை பஸ் ஸ்டாப் அருகில், ஸ்ரீ லட்சுமி ஏஜென்சி என்ற பெயரில் மொபைல் கடை நடத்தி வந்தார். மேலும், 'சிம்' கார்டுகள் மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனையும் செய்து வந்துள்ளார்.
இவரது கடைக்கு நேற்று டில்லியிலிருந்து வந்த சி.பி.ஐ., போலீஸ் அதிகாரிகள், டில்லி ரூஸ் அவென்யூ கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி அளித்த உத்தரவுப்படி, சதாசிவத்தின் கடை மற்றும் வீடுகளை சோதனையிடுவதாக கூறினர். இது குறித்து நீதிமன்ற உத்தரவையும் போலீசாரிடம் வழங்கினர். நேற்று மதியம் முதல் மாலை வரை சோதனையிட்ட சி.பி.ஐ., போலீசார், லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை கைப்பற்றி, சதா
சிவத்தையும் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
சதாசிவம் மொபைல் கடையில் கடந்த, 2023ல், ஒருவர் போலி ஆதார் எண்ணை வைத்து, ஒரு 'சிம் கார்டு' வாங்கியுள்ளார். அதை வாங்கி சென்றவர் விபரங்கள் முழுமையாக இல்லை. ஆனால் அந்த 'சிம் கார்டு' பயன்படுத்தியவர் எண்ணில் இருந்து சட்டவிரோதமாக பலருக்கு பண பரிவர்த்தனை ஆகியுள்ளது. மேலும், பலரின் வங்கி கணக்கிலிருந்தும் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த பல மோசடி வழக்குகளும் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த மர்ம
நபரை பிடிக்க முடியவில்லை. அவர், தான் பயன்படுத்தும், மொபைல் எண்ணின் நெட்வொர்க்கை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையில், 'சிம் கார்டு' வாங்கியது வேப்பனஹள்ளியில் உள்ள சதாசிவத்தின் கடை என்பதை
கண்டறிந்தனர்.
அவரை கைது செய்த சி.பி.ஐ., போலீசார், அவரிடமிருந்து ஒரு லேப்டாப் மற்றும், 4 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். இந்த மோசடி மற்றும் பணபரிவர்த்தனை சம்பவங்களில் சதாசிவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கவுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.