/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சேதமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற முடிவுசேதமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற முடிவு
சேதமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற முடிவு
சேதமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற முடிவு
சேதமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற முடிவு
ADDED : ஜூலை 25, 2024 01:40 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றித்திற்கு உட்பட்ட ஒட்டப்-பட்டி பஞ்.,ல் உள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த, 2012ல் கட்டப்பட்டது.
அது தற்போது பராமரிப்பின்றியும், துாண்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், இடிந்து விழும் நிலையில் இருப்பதாக, நம் 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த, 14ல் செய்தி வெளியானது. இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சம்பந்-தப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அவரது ஒப்-புதலோடு கட்டப்பட்டுள்ளது என தெரிந்தது. எனவே, அதை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கு சம்-பந்தப்பட்ட நபரிடம் எழுத்துபூர்வ கடிதம் வாங்கிய பின், மேல்-நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்படுமென, மத்துார் பி.டி.ஓ., செந்தில் தெரிவித்துள்ளார்.