ADDED : மே 10, 2025 02:06 AM
ராயக்கோட்டை, ராயக்கோட்டை அருகே பட்டிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 42, விவசாயி; இவரது நிலத்தில் இருந்த நெல் பயிரை, கோடியூரை சேர்ந்த டிரைவர் முருகன், 26, வாகனம் மூலம் அறுத்து கொடுத்தார். அதற்கான தொகையை தருமாறு கேட்டு கடந்த, 5ம் தேதி காலை, 9:30 மணிக்கு மாரியப்பன் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த அவரது மனைவி சாலம்மாவிடம், பணம் தருமாறு முருகன் கேட்டுள்ளார். நாளை தருவதாக அவர் கூறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மாரியப்பனுக்கும், முருகனுக்கும் இடையே வார்த்தை தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகன், கையால் மாரியப்பனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். மாரியப்பன் புகார்படி, ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, முருகனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அதேபோல், தன்னை தாக்கியதாக முருகன் கொடுத்த புகார்படி, மாரியப்பன், சுப்பிரமணி, 54, சென்ராயன், 55, அம்மாசி, 50, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்