Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூர் மாநகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு

ஓசூர் மாநகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு

ஓசூர் மாநகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு

ஓசூர் மாநகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு

ADDED : ஜூன் 28, 2025 03:54 AM


Google News
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கமிஷனர் நேற்று பொறுப்பேற்ற நிலையில், மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஓசூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீகாந்த், கடந்த ஜனவரியில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ஆவடி மாநகராட்சி துணை கமிஷனர் மாரிச்செல்வி பொறுப்பு கமிஷனராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், மயி-லாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி) கூடுதல் கலெக்டர் ஷபீர் ஆலம், ஓசூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்-கப்படுவதாக,

தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, ஓசூர் மாநகராட்சி கமிஷனராக ஷபீர் ஆலம் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவரை, மாநகர மேயர் சத்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா மற்றும் கவுன்சிலர்கள், ஊழியர்கள் சந்-தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, ஓசூரில் நகரின் வளர்ச்-சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசின் திட்டங்களை பயன்படுத்தி, மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us