Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நகர்புறங்களில் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக குழந்தைகளை அழைத்து செல்ல கலெக்டர் அறிவுரை

நகர்புறங்களில் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக குழந்தைகளை அழைத்து செல்ல கலெக்டர் அறிவுரை

நகர்புறங்களில் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக குழந்தைகளை அழைத்து செல்ல கலெக்டர் அறிவுரை

நகர்புறங்களில் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக குழந்தைகளை அழைத்து செல்ல கலெக்டர் அறிவுரை

ADDED : மே 11, 2025 01:43 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில், தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து, கலெக்டர் தினேஷ் குமார் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஒரு பஸ்சை இயக்கி குப்பம் சாலையில் சிறிது தூரம் ஓட்டி சென்றார். பின்னர் அதிகாரிகள், அலுவலர்கள், டிரைவர்களிடம், வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து அறிவுரைகளை கூறினார்.

கல்லுாரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் அவசர

கால வழி, முதலுதவி பெட்டி, உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்டு, ஓசூரில், 105 பள்ளிகள் உள்ளன. இதில், கிருஷ்ணகிரி வட்டாரத்திற்குட்பட்ட, பள்ளி வாகனங்கள், ஓசூரில், பள்ளி வாகனங்கள் 893 உள்ளிட்ட பள்ளி பஸ்கள், 1,992 ம் பள்ளி வாகன சிறப்பு விதிகள்படி, இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு பணி ஒருவார காலத்திற்கு நடக்கும்.

பள்ளி வாகனங்களில் அவசர கால பொத்தான், பள்ளியின் விபரங்கள், தொடர்பு எண்கள் உள்ளிட்டவை இருக்க வேண்டும். சிறு சிறு பழுதுகள் இருந்தாலும் டிரைவர்கள், நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். வாகனத்தை அவர்கள் கோவிலாக பார்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் பெற்றோர், மாணவர்களை உங்களை நம்பிதான் அனுப்புகின்றனர். எனவே நகர்புறங்களில் வேகத்தை குறைத்து, பாதுகாப்பாக குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜ கான், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அன்புசெழியன், மணிமாறன், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us