/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டம் பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டம்
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டம்
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டம்
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பை வரவேற்று கொண்டாட்டம்
ADDED : மே 14, 2025 01:49 AM
கிருஷ்ணகிரி, தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில், 9 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு தொகையும் வழங்கி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை வரவேற்று, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு நகர, தி.மு.க., பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி ஆகியோர் தலைமையில், கிருஷ்ணகிரி ஐந்துரோடு ரவுண்டானாவில் கொட்டும் மழையில், தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த அநீதிக்கு தக்க பாடம் கிடைத்துள்ளதாக கூறி, கோஷங்கள்
எழுப்பினர்.
நகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வி.சி., கட்சியினர், பார்லிமென்ட் தொகுதி செயலாளர் செந்தமிழ் தலைமையில், ஓசூரில் நேற்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட அமைப்பாளர் இளையராஜா, நிர்வாகிகள் ஆனந்தன், முரளி, முனிராஜ் உட்பட பலர்
பங்கேற்றனர்.