/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்கு
ADDED : செப் 25, 2025 01:50 AM
அஞ்செட்டி :கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில், கேரட்டி பஸ் ஸ்டாப் அருகே, தொட்டமஞ்சு உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று முன்தினம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மொபைல்போன் டவர் அமைக்க வேண்டும். உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டதாக, சித்தப்பனுாரை சேர்ந்த கோபி, 48, உட்பட பலர் மீது, நாட்றாம்பாளையம் வி.ஏ.ஓ., கண்ணன் புகார்படி, அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.