/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போச்சம்பள்ளி சாலையில் ஓடிய கார் தீப்பற்றி நாசம்போச்சம்பள்ளி சாலையில் ஓடிய கார் தீப்பற்றி நாசம்
போச்சம்பள்ளி சாலையில் ஓடிய கார் தீப்பற்றி நாசம்
போச்சம்பள்ளி சாலையில் ஓடிய கார் தீப்பற்றி நாசம்
போச்சம்பள்ளி சாலையில் ஓடிய கார் தீப்பற்றி நாசம்
ADDED : மார் 24, 2025 07:10 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, சந்துார் சாலையில் ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் கடைகள், வங்கிகள் செயல்படுகின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாரச்சந்தைக்கு மக்கள் அதிகளவு வந்து சென்று கொண்டிருந்தனர்.
மதியம் 12:00 மணிக்கு திப்பனுாரை சேர்ந்த பசுபதி, 48, என்பவர், தன் உறவினர்களுடன், அதே பகுதியில் உறவினரின் இறுதி சடங்கிற்கான பொருட்களை வாங்கிக் கொண்டு, சேலத்தை சேர்ந்த பாலா, என்பவரின் ஹூண்டாய் யுனோ காரில் சென்றபோது, திடீரென கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட பசுபதி மற்றும் அவரின் நண்பர்களான சுரேஷ் உள்ளிட்ட, 4 பேரும் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கினர். அதன்பின், தீப்பற்றிய கார் மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. வணிக நிறுவனங்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கார் தீப்பற்றி எரிந்ததால், அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர்.