/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிரிக்கெட் நடுவர்களுக்கான பயிற்சி வகுப்பு வரும் 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு கிரிக்கெட் நடுவர்களுக்கான பயிற்சி வகுப்பு வரும் 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கிரிக்கெட் நடுவர்களுக்கான பயிற்சி வகுப்பு வரும் 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கிரிக்கெட் நடுவர்களுக்கான பயிற்சி வகுப்பு வரும் 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
கிரிக்கெட் நடுவர்களுக்கான பயிற்சி வகுப்பு வரும் 31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 29, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி, கிரிக்கெட் நடுவர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்வில் பங்கேற்க வரும், 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும், கிரிக்கெட் நடுவர்களுக்கான (அம்பயர் மற்றும் ஸ்கோரர்) பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுகள் ஜூனில் நடக்கிறது. நடுவர்கள் தேர்வில், 18 முதல், 35 வயது வரை உள்ள, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்புகள், கந்திகுப்பத்தில் உள்ள கிங்ஸ்லி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. பயிற்சி மற்றும் தயாரிப்பு வகுப்புகள் தேசிய நடுவர்களால் நடத்தப்படும். நடுவர்களுக்கான வகுப்பு மற்றும் தேர்வுகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம், 41, -நஞ்சப்ப செட்டி காலனி, ராயப்பன் தெரு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, மேலாளர் காளிதாசன், 99941 82296 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 31- மாலை, 5:00 மணிக்குள் கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.