Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குட்டையில் மூழ்கிய அண்ணன் காப்பாற்ற முயன்ற தம்பியும் பலி

குட்டையில் மூழ்கிய அண்ணன் காப்பாற்ற முயன்ற தம்பியும் பலி

குட்டையில் மூழ்கிய அண்ணன் காப்பாற்ற முயன்ற தம்பியும் பலி

குட்டையில் மூழ்கிய அண்ணன் காப்பாற்ற முயன்ற தம்பியும் பலி

ADDED : செப் 21, 2025 01:30 AM


Google News
ஆட்டையாம்பட்டி :குட்டையில் குளித்தபோது, அண்ணன் மூழ்கிவிட்டார். அவரை காப்பாற்ற முயன்ற தம்பியும், நீச்சல் தெரியாததால் மூழ்க, இருவரும் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் மின்னக்கல், வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் சுப்ரமணி, 50. கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தா, 43. இவர்களது மூத்த மகன் நிஷாந்த், 23, பிளஸ் 2 முடித்து விட்டு, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இளைய மகன் பிரசாந்த், 19, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

ஆட்டையாம்பட்டி அருகே அரசம்பாளையம் சொரிமலை கரடு அடிவாரத்தில் குட்டை உள்ளது. இரு நாட்களாக பெய்த மழையால், அதில் தண்ணீர் அதிகம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை, நிஷாந்த், பிரசாந்த், அவர்களது உறவினர்கள் இருவர், அந்த குட்டையில் குளிக்க சென்றனர்.

சகோதரர்களுக்கு நீச்சல் தெரியாத நிலையில், முதலில் இறங்கிய நிஷாந்த் மூழ்கிவிட்டார். அதிர்ச்சி அடைந்த பிரசாந்த், காப்பாற்ற முயன்றபோது அவரும் மூழ்கினார். இருவரும் சேறு சகதியில் சிக்கினர். இதை கண்டு உறவினர்கள் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, இருவரையும் தேடினர். ஆனால் இருவரையும் சடலமாகவே மீட்க முடிந்தது. இதுகுறித்து சுப்ரமணி புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார்

விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us