/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்
துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்
துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்
துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்
ADDED : ஜன 08, 2024 11:02 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, அயோத்தி ராமர் கோவில்
கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன.
தேன்கனிக்கோட்டையில் கடந்த, 1990 அக்., 10ல், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நடந்த, ஸ்ரீராம ஜோதி ஊர்வலத்தில், பக்தர்கள் மீது, போலீசார்
துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், தேன்கனிக்கோட்டை, திம்மசந்திரம், காமையூர் பகுதியை சேர்ந்த நரசிம்மைய்யா, பாபு, சங்கர், ராஜா ஆகிய, 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அயோத்தி யில் ராமர் கோவில் கட்டப்பட்டு, வரும், 22ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி, துப்பாக்கி சூட்டில் பலியான, 4 பேரின் குடும்பத்தினர், ராமர் கோவில்
கும்பாபிஷேகத்திற்கு
வருவதற்காக அழைப்பிதழை, ஆர்.எஸ்.எஸ்., தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார் நேற்று வழங்கினார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மொத்தம், 8,000 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில்,
துப்பாக்கி சூட்டில் பலியான, 4 பேரின் குடும்பங்கள் உட்பட மொத்தம், 106 பேருக்கு
மட்டுமே கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.