Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 52 இடங்களில் தானியங்கி மழைமானி அமைப்பு

52 இடங்களில் தானியங்கி மழைமானி அமைப்பு

52 இடங்களில் தானியங்கி மழைமானி அமைப்பு

52 இடங்களில் தானியங்கி மழைமானி அமைப்பு

ADDED : ஜூலை 05, 2025 01:22 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 52 இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பொழிவு இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்யும் மழையின் அளவை துல்லியமாக அறிவும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் புதியதாக, 1,000 தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே, 16 இடங்களில் மழைமானிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வானிலை முன்னறிவிப்பு மற்றும் மழையளவு தொடர்பான, மேம்படுத்தப்பட்ட தகவல்களை வழங்க புதிதாக, 52 இடங்களில் தானியங்கி மழைமானிகள் வானிலை மையம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மழையளவு, வானிலை முன் அறிவிப்பு, காற்றின் ஈரப்பதம், வெப்ப நிலை உள்ளிட் விபரங்களும் கிடைக்கும். இக்கருவிகளை பாதுகாக்கும் பொருட்டு கிராமங்களில் அமைந்துள்ள மையங்களுக்கு, சம்பந்தப்பட்ட பகுதியின் குறுவட்ட ஆர்.ஐ.,க்கள் பொறுப்பு அலுவலர்களாகவும், வட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளதற்கு தலைமையிடத்து துணை தாசில்தாரும், பி.டி.ஓ அலுவலகத்தில் நிறுவப்பட்டதற்கு துணை பி.டி.ஓ., (நிர்வாகம்) ஆகியோரை பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பணிகளை, எதிர்காலத்தில் உடனுக்குடன் மேற்கொள்ள இயலுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us