/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மது குடிக்க பணமின்றி கோவிலில் திருட முயற்சி மது குடிக்க பணமின்றி கோவிலில் திருட முயற்சி
மது குடிக்க பணமின்றி கோவிலில் திருட முயற்சி
மது குடிக்க பணமின்றி கோவிலில் திருட முயற்சி
மது குடிக்க பணமின்றி கோவிலில் திருட முயற்சி
ADDED : மே 14, 2025 01:52 AM
தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த பாலதொட்டனப்பள்ளி அருகே உள்ள தேக்கூரை சேர்ந்தவர் பைரேஸ்வரா, 45. கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு, பாலதொட்டனப்பள்ளியில் உள்ள மத்துாரம்மா கோவிலின் ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியதுடன், உண்டியலை உடைத்து திருட முயன்றார். முடியாததால் தப்பிச்சென்றார். காலையில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், கோவில் உண்டியல் மற்றும் ஜன்னல் சேதமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பாலதொட்டனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் சுரேஷ், 34, என்பவர், தளி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், மது வாங்கி குடிக்க பணம் இல்லாததால், பைரேஸ்வரா கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. பைரேஸ்வராவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.