Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சட்டசபை மதிப்பீட்டு குழு நலத்திட்ட உதவி வழங்கல்

சட்டசபை மதிப்பீட்டு குழு நலத்திட்ட உதவி வழங்கல்

சட்டசபை மதிப்பீட்டு குழு நலத்திட்ட உதவி வழங்கல்

சட்டசபை மதிப்பீட்டு குழு நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : மே 22, 2025 01:25 AM


Google News
தர்மபுரி,தர்மபுரி மாவட்டத்தில், சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் வேடசந்துார் தொகுதி எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில், உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.,க்கள், சங்கராபுரம் உதயசூரியன், வாசுதேவநல்லுார் சதன் திருமலைக்குமார், மாதவரம் சுதர்சனம், ஆரணி ராமச்சந்திரன், திருப்போரூர் பாலாஜி, தர்மபுரி வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

நல்லம்பள்ளி அடுத்த நார்த்தம்பட்டியில் வனத்துறை சார்பில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.5 ஏக்கரில் அமைத்துள்ள மரகத பூங்காவில் மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து, தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், கலெக்டர் சதீஸ் முன்னிலையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன், 25 பயனாளிகளுக்கு, 17.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், எம்.எல்.ஏ.,க்கள் பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார், சட்டசபை முதன்மைச் செயலர் சீனிவாசன், கூடுதல் கலெக்டர் கேத்தரின் சரண்யா உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us